செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இரு என்பு கூட்டு குவியல் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 9ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம்(6) புதன்கிழமை நடைபெற்றது.
அதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 3 என்பு கூட்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவற்றின் பெருமளவான பாகங்கள் மயானத்தின் எரிமேடை கட்டுமானத்திற்கு கீழ் செல்வதனால் , அதனை சுத்தம் செய்து அகழ்ந்து எடுக்கும் பணிகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 252 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts
