ஓக்வில் மற்றும் பர்லிங்டன் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹால்டன் பிராந்தியத்தில் உள்ள ஒன்பது பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அந்தப் பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (மே 7, 2026) காலை ஹால்டன் மாவட்ட பள்ளி வாரியத்திற்கு (HDSB) மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஓக்வில் மற்றும் பர்லிங்டன் பகுதிகளில் உள்ள 9 முக்கிய பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மிரட்டலைத் தொடர்ந்து ஒவ்வொரு பள்ளியிலும் போலீஸார் குவிக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சோதனைகள் நடந்தாலும், தற்போது வரை பள்ளிகள் முழுமையாக மூடப்படவோ (Hold-and-secure) அல்லது மாணவர்கள் வெளியேற்றப்படவோ இல்லை. 

சில நாட்களுக்கு முன்பு டொராண்டோவில் உள்ள 16 பள்ளிகளுக்கு இது போன்ற போலி மிரட்டல்கள் வந்தன. எனவே, தற்போதைய மிரட்டலும் வெறும் வதந்தியாக இருக்கலாம் என போலீஸார் கருதினாலும், பாதுகாப்பு கருதி முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி