ருமேனிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் (Romanian Organized Crime) தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் ஆக்ஸ்பிரிட்ஜில் வைத்து கைது செய்துள்ளனர். இவர் கலிபோர்னியா காவல்துறையினராலும் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நபர் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, ஆக்ஸ்பிரிட்ஜ் பகுதியில் தலைமறைவாக இருந்துள்ளார். டர்ஹாம் போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இவர் சிக்கினார். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கனடிய எல்லைப் பாதுகாப்பு முகமையின் (CBSA) கட்டுப்பாட்டில் உள்ளார். இவரை மீண்டும் அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்தகைய சர்வதேச கும்பல்கள் ஏடிஎம் இயந்திரங்களில் ரகசியக் கருவிகளைப் பொருத்தி தகவல்களைத் திருடுவதில் வல்லவர்கள். எனவே பொதுமக்கள் ஏடிஎம் பயன்படுத்தும்போது விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
