மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகமாக மாறி வரும் நிலையில், முக்கிய அரசியல் சந்திப்பு ஒன்று இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றுள்ளது.

மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன்  உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தவெக தலைவர் விஜய், ஆட்சியமைப்பதற்கான ஆதரவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் கோரியுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களை கைப்பற்றிய நிலையில்,  காங்கிரஸ் கட்சி த.வெ.கவுக்கு ஆதரவு அளித்தது அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

இந்த நிலையில், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள், விஜயின் ஆட்சியமைப்பு முயற்சி மற்றும் ஆளுநரின் நிலைப்பாடு குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திமுக சட்டப்பேரவை கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் ஆட்சி அமைக்க முயற்சிப்பதில் திமுக இடையூறு செய்யாது என்று   மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த புதிய சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  மற்றும் இடதுசாரி கட்சிகள் எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன என்பது மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி