சவுதியின் அறிவிப்பால் அமெரிக்கா திண்டாட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Strait of Hormuz பகுதியில் அமெரிக்கா முன்னெடுத்த ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ இராணுவ நடவடிக்கை வெறும் 36 மணி நேரத்திலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணியில் Saudi Arabia உடனான அதிருப்தி காரணமாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Donald Trump, பிராந்திய கூட்டாளி நாடுகளுடன் ஆலோசிக்காமல் சமூக வலைதளத்தின் மூலம் இந்த திட்டத்தை அறிவித்ததாகவும், இதனால் சவுதி தலைமை அதிருப்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரியாத்திற்கு அருகிலுள்ள Prince Sultan Air Base தளத்தை அமெரிக்க ராணுவம் பயன்படுத்துவதற்கு சவுதி அனுமதி மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்கப் போர் விமானங்கள் சவுதி வான்வெளியை பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் அமைதி முயற்சிகளுக்கே தாங்கள் ஆதரவு அளிப்போம் என சவுதி தரப்பு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ ரீதியில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் “Access, Basing and Overflight” அனுமதிகள் இல்லாமல், பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிக்கலில் சிக்கியதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாகவே ட்ரம்ப் தனது ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக ஈரானுடன் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்றும், ட்ரம்பின் அடுத்தகட்ட தூதரக முயற்சிகள் மீது உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி