தவெக “போதை ஆட்டம்” வைரல் வீடியோ

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ குறித்து,  விஜய் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

 

தஞ்சாவூர் தொகுதியைச் சேர்ந்த த.வெ.க. எம்.எல்.ஏவான விஜய் சரவணன், மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் நடனமாடும் காட்சி கொண்ட வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தனிப்பட்ட நிகழ்வின் பழைய வீடியோ” என தெரிவித்துள்ளார்.

மேலும், அடையாளம் தெரியாத புதிய வாட்ஸ்அப் எண்களில் இருந்து இந்த வீடியோவை சில சமூக வலைதள பிரபலங்களுக்கு அனுப்பி, திட்டமிட்டு அவதூறு பரப்ப முயற்சி நடைபெறுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் விரக்தியால் சிலர் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும்  விஜய் சரவணன்  குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், போலி தகவல்களை பரப்புபவர்கள் மற்றும் அவதூறு பரப்ப தூண்டுபவர்கள் மீது சைபர் கிரைம் பிரிவின் மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி