புதிய முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படி தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக தவெகவின் தலைவர் விஜய் நாளையதினம் பதவியேற்கவுள்ளார்.

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக 108 ஆசனங்களை தவெக பெற்றிருந்தது.

இதன்படி, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி இரண்டு முறை ஆளுநரை சந்தித்து விஜய் அனுமதி கோரிய போதிலும் பெரும்பான்மை இல்லாததால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆட்சியமைப்பதற்கு 118 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஏனைய கட்சிகளுடன் கூட்டணிக்குச் செல்ல வேண்டிய நிலை தவெகவிற்கு ஏற்பட்டது.

இந்தநிலையில், நீண்ட இழுபறியின் பின்னர், பேச்சுவார்த்தை நடத்திய சில கட்சிகள் விஜய் தரப்பிற்கு ஆதரவு வழங்க சம்மதித்துள்ளனர். இதற்கமைய இன்று மாலை, ஆளுநரை மீண்டும் சந்தித்த தவெகவின் தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைப்பதற்கான அனுமதியை ஆளுநர் வழங்கியுள்ளார்.

இதன்படி, நாளையதினம் 11 மணியளவில் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்கவுள்ளதுடன், தவெக ஆட்சியமைக்கவுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி