ஓமன் வளைகுடாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா விதித்த தடைகளை மீறி ஈரானிய துறைமுகத்தை நோக்கி சென்றதாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் டாங்கர்கள் மீது அமெரிக்கா படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பல்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அமைப்பு விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போர் கப்பல்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பஹ்ரைன் அரசு, ஈரான் புரட்சிகர காவல் படையுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 41 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஹ்ரைன் எச்சரித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அந்த நாடு வெளியிடவில்லை.
