தரையிறங்கியவுடன் டயர் வெடிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய   துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததைத் தொடர்ந்து தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தரையிறங்கும் தருணத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமானத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலைய அவசர சேவை பிரிவினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் மற்றும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் சில நேரம் விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி