ஆல்பர்ட்டாவில் சாலை விபத்து: இருவர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆல்பர்ட்டா மாகாணத்தின் ராக்கி வியூ கவுண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு சிறுவன் உட்பட மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10:39 மணியளவில், நெடுஞ்சாலை 9 (Highway 9) மற்றும் 564 சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஒரு ட்ரெய்லரை இழுத்துச் சென்றுகொண்டிருந்த 'ஜிஎம்சி' (GMC) ரக ட்ரக் வாகனமும், நான்கு பேர் பயணித்த 'ஃபோர்டு எஸ்கேப்' காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

'ஃபோர்டு எஸ்கேப்' காரில் பயணித்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே காரில் இருந்த மற்றொரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய ஒரு சிறுவன், 'ஸ்டார்ஸ் ஏர் ஆம்புலன்ஸ்' மூலம் ஆல்பர்ட்டா குழந்தைகள் மருத்துவமனைக்கு மிக மோசமான நிலையில் கொண்டு செல்லப்பட்டார்.

காரில் இருந்த ஒரு ஆண் ஆபத்தான நிலையிலும், ட்ரக் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஏர்ட்ரி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி