Font size:
Print
காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இன்று (12) காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
