கணினி குற்றங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, கணினி குற்றங்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது, இந்தியர்கள் 174 பேரும் நேபாளிகள் 24 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை,  சுற்றுலா விசாவில் வருகை தந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்தமை, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை உடமையில் வைத்திருந்தமை, கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் வரும் பாரிய மோசடிகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மிதிகம மற்றும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி