தமிழ்நாட்டின் முதலமைச்சராக நேற்று (10) பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு உயர்மட்ட பாதுகாப்பினை வழங்க இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை முதலமைச்சர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று (11) முதல் Z+ பாதுகாப்பு அளிக்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த Z+ பாதுகாப்பு படைப் பிரிவில் 55 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 24 மணிநேரமும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் மிக உயர்ந்த அளவில் அளிக்கப்படும் Z+ பாதுகாப்பானது முதலமைச்சர்கள், உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கடும் அச்சுறுத்தல்களை சந்திக்கக்கூடிய பெரும் புள்ளிகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கக்கூடிய பாதுகாப்புப் பிரிவாக காணப்படுகிறது.
இந்த பாதுகாப்பு அடுக்கில் 55 படைவீரர்கள் இருப்பார்கள். இதில் NSGயின் சிறப்பு படைப் பிரிவினர் மற்றும் மாநில காவல்துறையினர் அடங்குவர்.
மேலும், முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றும் 24x7 நேர கடும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முதலமைச்சருக்கென ஹெக்லர் & கோச் MP5 துணை இயந்திரத் துப்பாக்கிகள் முதலிய நவீன ஆயுதங்கள் வழங்கப்படுவதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Font size:
Print
Related Posts
