யாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் மே 18 “தமிழின அழிப்பு நாள்” நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், யாழ் மாநகரசபையில் இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

யாழ் மாநகர முதல்வர் திருமதி மதிவதனி  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சபா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நினைவுப் படத்தின் முன்னால் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு, முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்தனர்.

அதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்ந்த உறுப்பினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முக்கியமான அஞ்சலி நிகழ்வாகக் கருதப்படுகின்றன.
 

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி