யாருடைய ஆதிக்கத்தையும் ஏற்க முடியாது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் , ஆசிய நட்புநாடுகள் அவற்றின் தற்காப்புச் செலவுகளை அதிகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

சீனா ராணுவ பலத்தை அதிகரிக்கும் வேளையில் அது அவசியம் என்றார்.

வட்டாரத்தில் பெய்ச்சிங் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க தற்காப்புச் செலவுகளை அதிகரிக்கும்படி திரு ஹெக்செத் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்கிரிலா கலந்துரையாடலில் அவர் உரையாற்றினார்.

வலுவான, தற்சார்புத் தன்மை அதிகம் கொண்ட நட்புநாடுகள் முக்கியம் என்று திரு ஹெக்செத் குறிப்பிட்டார்.

சீனா அதன் ராணுவ நடவடிக்கைகளை வட்டாரத்திலும் அதைத் தாண்டியும் விரிவுபடுத்துகிறது அது பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சீனா உட்பட எந்த நாடும் ஆதிக்கம் செலுத்தி அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் ஆகியவற்றின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்க முடியாது என்று திரு ஹெக்செத் உறுதிபடக் கூறினார்.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி