உக்ரைன் போர்க்களத்தில் ‘ரோபோ’ படை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரஷ்யாவுடனான நீண்டகால போரில் மனிதவள பற்றாக்குறை மற்றும் ஆயுத விநியோக தாமதங்களை எதிர்கொண்ட உக்ரைன், தற்போது தனது போர்த் தந்திரத்தை முழுமையாக மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளில்லா வான்வழி ட்ரோன்கள், தரைவழி ரோபோக்கள் மற்றும் தானியங்கி டாங்கிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் பலத்த தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர்க்களத்தில் மனிதர்களை நேரடியாக அனுப்புவதற்கு பதிலாக, வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் மற்றும் தொலைநிலை கட்டுப்பாட்டு ஆயுத அமைப்புகள் பயன்படுத்தப்படுவதால், வீரர்களின் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் இராணுவத்தின் கணக்கீட்டின்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட 164 தாக்குதல்களை வழக்கமான படை நடவடிக்கைகளாக நடத்தியிருந்தால், சுமார் 2,300 வீரர்கள் தேவைப்பட்டிருப்பார்கள்.

அத்துடன், அந்த நடவடிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழக்கவோ அல்லது கடுமையாக காயமடையவோ வாய்ப்பிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நான்கு சக்கர வெடிகுண்டு ரோபோக்கள் மற்றும் ஆளில்லா தாக்குதல் அமைப்புகளின் பயன்பாட்டினால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் துணைப் படைப்பிரிவுத் தளபதி தெரிவித்துள்ளார்.

போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி ஆயுதங்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் எதிர்கால போர் தொழில்நுட்பங்களுக்கான முக்கிய சோதனைக் களமாக மாறியுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி