அமெரிக்க ட்ரோனை உள்நாட்டு ஆயுதம் மூலம் வீழ்த்தல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் அதிநவீன MQ-9  ரீப்பர் ரக ட்ரோனை, தாங்களே உருவாக்கிய வான் பாதுகாப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள கெஷ்ம் தீவு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஈரானின் கூற்றுப்படி, “ஆராஷ்-இ-கமன்கீர்” எனப்படும் உள்நாட்டு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்தியே இந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள  MQ-9  ரீப்பர் ட்ரோனை, ரேடார் உதவியின்றி குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாகவும் ஈரான் பெருமிதம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஏவுகணைக்கு, பாரசீக புராணங்களில் இடம்பெறும் புகழ்பெற்ற வில் வீரரான “ஆராஷ்” என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை நினைவுகூரும் வகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆராஷின் உருவம் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட விளம்பரப் பலகையும் பொதுமக்கள் பார்வைக்காக நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், இந்த அறிவிப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி