Font size:
Print
இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மற்றொரு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு நரேந்திர மோடி மைதானத்தில் இருந்து வீரர்கள் தங்கியிருந்த விருந்தகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது, அணியின் பேருந்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
எனினும், வீரர்கள் அனைவரும் உடனடியாக மற்றும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து காரணமாக வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் வீதியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related Posts
