இந்தியா இந்தோனேசியாவுக்கு ஏவுகணை விற்பனை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை ஏற்றுமதி தொடர்பில் முக்கியமான முன்னேற்றங்கள் பதிவாகி வருகின்றன.

வியட்நாமைத் தொடர்ந்து, இந்தோனேசியாவுக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய அவர், வியட்நாமுடன் ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளதையும், ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாததையும் குறிப்பிட்டார். அதேபோல், இந்தோனேசியாவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையும் சுமுகமாக நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வியட்நாமுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 5,800 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடற்கரை பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள், பேட்டரிகள், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

மேலும் எதிர்காலத்தில் போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கவும் வியட்நாம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கிய முதல் வெளிநாடாக மாறியது.

தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகியவற்றுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் கடல் எல்லைப் பதற்றத்தின் பின்னணியில் இந்த ஆயுத கொள்முதல்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி