பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டிருந்தால் உடன் அறிவிக்கவும்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்த சுத்தா என்ற ரன்தெடிகே நிஷாங்க பிரியதர்ஷன என்பவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினர் இன்று (1) கடுவலை பகுதியில் வைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இவர் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

டுபாயில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 7 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுத்தரவில்லை என கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், மீண்டும் நாட்டிற்கு திரும்பிய நிலையில் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கடுவலை பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரி கைது செய்ய சென்றபோது, விசாரணை அதிகாரிகளை தவிர்த்து தனது தனிப்பட்ட காரில் தப்பியோட முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசா மூலம் டுபாய்க்கு வேலைக்காக ஆட்களை அனுப்பிவைக்கும் முக்கிய கடத்தல் மோசடியை சமூக ஊடகங்களை பயன்படுத்தி நடத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (02) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி எவரையும் வெளிநாட்டு வேலைகளுக்குப் பணியமர்த்துவது சட்டவிரோதமானது.

எனவே நீங்களோ அல்லது உங்களது உறவினர்களோ வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக இந்த நபரிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்திருந்தால், பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் 011 288 2229 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி