தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட மௌலவிகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அம்பாறையில் சிறுமி ஒருவரைத் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயதுச் சிறுமி ஒருவரே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபரான மௌலவி தப்பிச் சென்றிருந்த நிலையில் பின்னர் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் ஜூன் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகத் தெரிவிக்கப்படும் மற்றொரு 21 வயதுடைய மௌலவியும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி