ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார்.
சர்வதேச தடைகளை மீறி ரஷ்யா மற்றும் ஈரானின் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் சந்தேகிக்கப்படும் 'டாகோர்' என்ற எண்ணெய் கப்பலை அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் அதிரடியாகக் கைப்பற்றியது. ரஷ்யாவின் கப்பற்படைக்கு சொந்தமான இந்த கப்பல் பிரான்ஸ் கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டது. இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேசத் தடைகளை மீறி, ரஷ்யாவிலிருந்து வந்த 'டாகோர்' என்ற புதிய எண்ணெய்க் கப்பலை பிரான்ஸ் கடற்படை காலை இடைமறித்தது. எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாதது. இந்த நடவடிக்கை பிரிட்டன் உட்பட பல கூட்டாளிகளின் ஆதரவுடன், சட்டத்தை முழுமையாகப் பின்பற்றி, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
கப்பல்கள் சர்வதேசத் தடைகளை மீறுவதும், சட்டத்தை மீறுவதும், 4 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போருக்கு நிதியளிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கடல்வழிப் பயணத்தின் மிக அடிப்படையான விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறும் இந்தக் கப்பல்கள், சுற்றுச்சூழலுக்கும் அனைவரின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன. இவ்வாறு இமானுவேல் மேக்ரான் கூறினார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் இந்த நடவடிக்கை ரஷ்ய அதிபர் புடினுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Font size:
Print
Related Posts
