ஓமான் கடற்பரப்புக்கு அருகே, அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பனாமா கொடியுடன் இயங்கும் ' MSC சரிஸ்கா V' கொள்கலன் கப்பலை குரூஸ் ஏவுகணை மூலம் குறிவைத்து தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானிய ஊடகங்களின் தகவலின்படி, ஓமான் அருகே ஈரானியக் கப்பல் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கான பதிலடி நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உம் கஸ்ர் துறைமுகத்தின் தென்கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) அறிவித்திருந்தது.
எனினும், தாக்குதலுக்குள்ளான கப்பலின் அடையாளத்தை அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்தச் சம்பவம் அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலை சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
Font size:
Print
Related Posts
