அமெரிக்காவில் 7 பேர் கொலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள மஸ்கடைன் நகரில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது  சந்தேக நபர் உட்பட  ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 

காவல்துறை தகவல்படி, இந்த சம்பவம் குடும்பத்திற்குள் ஏற்பட்ட தீவிர தகராறைத் தொடர்ந்து பல இடங்களில் நடந்துள்ளது. முதற்கட்டமாக ஒரு குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் விசாரணையில், இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பாக அடையாளம் காணப்பட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்த நபர் ஒரு மேம்பாலம் அருகே தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். மருத்துவ உதவி அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விசாரணை தொடர்ந்து நடக்கும்போது, மேலும் இரண்டு பேர் வேறு இரண்டு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்தத் துப்பாக்கிச் சூடு குடும்பத் தகராறின் காரணமாகவே நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி