மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் ஏதும் இனிமேல் பாதுகாப்பானதாக இருக்காது என ஈரானை தற்போது ஆட்சி செய்யும் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
இதுவரை ஈரானில் 13 ஆயிரம் இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அதேநேரத்தில் ஈரானின் பதிலடியில் அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் அல் ரூவாயிஸ் மற்றும் அல் சதார் விமான தளங்களில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகுணை பேட்டரிகள் அமைப்பு சேதம் அடைந்துள்ளன.
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் அமெரிக்காவுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்புதல் மற்றும் கண்காணிப்பு விமானம் படு சேதம் அடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
குவைத்தில் உள்ள அலி அல் சதம் விமான தளம் மற்றும் அஜிப்ஜன் முகாம் மீதும் ஈரான் தாக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த போரில் அமெரிக்காவுக்கு சொந்தமான 42 போர் விமானங்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
