எட்டோபிகோக்கில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது கார் மோதி வாலிபர் பலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எட்டோபிகோக் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பெரிய லாரி ஒன்றின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணி அளவில், எட்டோபிகோக்கில் உள்ள ரெக்டேல் பவுலவர்டு மற்றும் ஹைவே 27 (Rexdale Boulevard and Highway 27) சந்திப்புக்கு அருகே குறித்த விபத்து நடந்துள்ளது. அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வணிக ரீதியிலான பெரிய லாரியின் பின்புறத்தில் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் பலமாக மோதியுள்ளது. விபத்தின் தீவிரத்தில் காரின் முன்பகுதி அப்படியே நசுங்கியது.

காரை ஓட்டி வந்த வாலிபர் வயது விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக டொராண்டோ அவசர மருத்துவக் குழுவினர்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்து குறித்து டொராண்டோ காவல்துறையின் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவினர் (Traffic Injury Drivers) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் Rexdale Boulevard-ன் ஒரு பகுதி மற்றும் ஹைவே 27-க்கான இணைப்புப் பாதைகள் பல மணி நேரம் மூடப்பட்டு, பின்னர் காலை நெரிசலுக்கு முன்பாகத் திறக்கப்பட்டன.

காரின் அதிவேகமே இந்த விபத்துக்கு முதன்மைக் காரணமா அல்லது ஓட்டுநருக்கு ஏற்பட்ட மருத்துவக் குறைபாடா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி