ஈரானுக்கு தடைகளில் தளர்வு இல்லை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்குப் பதிலாக, ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை தளர்த்தும் வகையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது தடைகள் விதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், அந்நாட்டின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி திட்டங்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிட ஒப்புக்கொண்டால் மட்டுமே, தடைகளில் தளர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் ரூபியோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் அரசியல் அமைப்பில் பல முக்கிய தலைவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் அந்நாட்டு தலைவர்கள் பொதுவெளியில் தோன்றுவதில் எச்சரிக்கையுடன் செயல்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, மொஜ்தபா கமேனி தொடர்ந்து சில மட்டங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளதாகவும் ரூபியோ தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்பான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அணுசக்தி விவகாரங்களில், மொஜ்தபா கமேனி பின்னணியில் இருந்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார் என அமெரிக்க தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அணுசக்தி விவகாரமும் பொருளாதாரத் தடைகளும் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி