வவுனியாவில் உழவியந்திரம் விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நேற்று (02) செவ்வாய்க்கிழமை வுனியா - கனகராயன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருசுட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது
இவ்விபத்தில் உயிரிழந்தவர் குருசுட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குருசுட்டிக்குளம் ஆலயத்திற்குச் சொந்தமான காணியை துப்புரவு செய்வதற்காக அந்த இளைஞர் டிராக்டரை செலுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, டிராக்டரை இயக்கு செய்ய முற்பட்ட போது அதில் ஒரு இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அதனை பழுதுபார்க்க முயன்ற போது, டிராக்டர் எதிர்பாராதவிதமாக முன்னோக்கி நகர்ந்ததால், அதன் சக்கரம் ஏறி குறித்த இளைஞர் நசுங்கியுள்ளார்.
விபத்தையடுத்து படுகாயமடைந்த குறித்த இளைஞர் புளியங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Font size:
Print
Related Posts
