கொ*லை செய்யப்பட்ட 22 வயது யுவதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கண்டி மாவட்டத்தில் 22 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெல்தெனிய, ரங்கல பகுதியில் 22 வயதான ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ரங்கல பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த ஜெயரத்ன தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதற்கமைய யுவதி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர், உதிஸ்பட்டுவ, ஹக்மான பகுதியை சேர்ந்த 22 வயதான வசன சந்தமாலி என ரங்கல பொலிஸாரால் உறுதிப்படுத்தபட்டுள்ளது.

தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜெயதிலக சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நேரில் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரங்கல பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சடலம் தொடர்பான மேலதிக பிரேதப் பரிசோதனைகளைத் தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உபுலி பண்டார ஊடாக மேற்கொண்டு, அது குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ரங்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ரங்கல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி