பஹ்ரைன், குவைத் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல் அண்மைக் காலமாக தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனினும், ஈரானின் குவாசம் தீவு பகுதியில் உள்ள இராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து, அதற்கு பதிலடியாக நேற்றைய தினம் குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையில்,  ஹர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றமும் உலக எரிபொருள் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்