உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க், ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் நபராக உருவாகக்கூடும் என சர்வதேச பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியும், பல்வேறு தொழில்நுட்ப முதலீடுகளின் தொடர்ச்சியான முன்னேற்றமும் அவரது சொத்து மதிப்பை வேகமாக உயர்த்தி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளின்படி, தற்போதைய வளர்ச்சி நிலை தொடருமானால், எதிர்வரும் ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டும் வரலாற்றுச் சாதனையை மஸ்க் படைக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் முன்னணி இடங்களில் உள்ள அவர், மின்சார வாகனங்கள், விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்.
ஒரு டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் நபர் யார் என்ற உலகளாவிய விவாதம் தொடரும் நிலையில், அதற்கான முக்கிய போட்டியாளராக ஈலோன் மஸ்க் பார்க்கப்படுகிறார்.
Font size:
Print
Related Posts
