அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இந்தியர் மர்மநபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இவர் பீட்சா டெலிவரி செய்யும் பணியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
குறித்த இந்தியர் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும், கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக வார இறுதி நாட்களில் பகுதி நேரமாக பீட்சா விநியோகிக்கும் பணியாளராகவும் பணியாற்றி வந்த நிலையில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் அமெரிக்காவிலும், தெலுங்கானாவிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பென்சில்வேனியாவில் வசித்து வந்த இந்தியரான அன்ஷுல் குன்சா மரணத்தால் நாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தூதரகம் அன்ஷுலின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Font size:
Print
Related Posts
