இஸ்ரேல் - ஈரான் மீண்டும் தாக்குதல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இடைக்கால போர் நிறுத்த முயற்சிகள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில்,  நேற்று பெய்ரூட்டின்  நகரின் தெற்கு புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என முன்னதாக எச்சரித்திருந்த ஈரான், தற்போது இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 ஈரானின் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற தாக்குதல்கள் தொடருமானால் தங்களின் பதிலடி மேலும் விரிவானதாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதுடன், மக்கள் பாதுகாப்பு முகாம்கள் மற்றும் பதுங்கு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் தகவலின்படி, மூன்று கட்டங்களாக ஏவப்பட்ட ஏவுகணைகளில் பல இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், வடக்கு பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலுக்கு கடுமையான மற்றும் சக்திவாய்ந்த பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் தரப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளதுடன், பிராந்திய அமைதியை நோக்கிய முயற்சிகளுக்கும் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்