செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை பாராட்டிய விஜய்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நோர்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர்  ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நோர்வே செஸ் தொடரின் இறுதிச் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த  வின்சென்ட் கீமரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா, இன்று சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின் போது, முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன், செஸ் பலகையில் நேரடியாக அவருடன் விளையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

சந்திப்புக்குப் பின்னர் கருத்து தெரிவித்த பிரக்ஞானந்தா, முதலமைச்சர் விஜய் தம்மை நேரில் அழைத்து பாராட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியதுடன், அவர் சிறப்பாக செஸ் விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சாதனையை பாராட்டும் வகையில் 50 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு, தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்