காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 30 பேர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான பாரிய போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை மீறல்கள், விலைவாசி உயர்வு, அரசியல் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, அவாமி நடவடிக்கை குழு என்ற மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மானியம் உள்ளிட்ட 38 கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்