வானில் நிகழவுள்ள அதிசயம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வானியல் அதிசயங்களில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் எதிர்வரும் ஒகஸ்ட் 12ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூரியக் கிரகணமானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வந்து, சூரியனின் ஒளி பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீது விழாமல் தடுக்கும் நிகழ்வாகும்.

இதேவேளை, ஐரோப்பா, ஆபிரிக்கா, வடக்கு அமெரிக்க நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்படும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

அதுமட்டுமன்றி, ஸ்பெயினில் இது போன்ற ஒரு கிரகணம் 1905ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்