உலகுக்கு பெரிய வெற்றி ;டிரம்ப்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்தாகிவிட்டதாகவும், அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் முழுமையான சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள டிரம்ப், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது பேசிய டிரம்ப், அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே பாதியளவு திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கப்பல்கள் மீண்டும் பயணத்தைத் தொடங்கியுள்ளன என்றும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஈரானுடன் தற்போது சுமுகமான உறவு நிலவுவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அணு ஆயுதங்கள் இல்லாத ஈரானை உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஈரான் மீது அமலில் உள்ள பொருளாதாரத் தடைகள் உடனடியாக நீக்கப்படாது என்றும், ஒப்பந்த விதிமுறைகளை அவர்கள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகம் மீண்டும் சீரடைவதால், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும், உலக பொருளாதாரத்திற்கு இது மிகப்பெரிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்