ஒப்பந்தம் இருந்தாலும் விழிப்புடன்; நெதன்யாகு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் தொடர்ந்து விழிப்புடன் செயல்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட  பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அனுமதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் ஒருபோதும் ஏற்காது என்று உறுதியாக தெரிவித்தார்.

“நான் இஸ்ரேல் பிரதமராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுத சக்தியாக மாற அனுமதிக்க மாட்டோம்” என்று நெதன்யாகு வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

அந்த நடவடிக்கைகளில் அணுசக்தி விஞ்ஞானிகள், பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தி திறன்கள் குறிவைக்கப்பட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை தடுக்க முடிந்ததே மிகப்பெரிய சாதனை என்று அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தாலும், அதன் செயல்பாடுகளை இஸ்ரேல் உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்ந்து முக்கியத்துவம் பெறும் நிலையில், நெதன்யாகுவின் இந்த கருத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.


 

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்