எத்தியோப்பியாவில் விபத்து: 31 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எத்தியோப்பியாவின் வடக்கு அம்ஹாரா பிராந்தியத்தில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. டெஸ்ஸி பகுதியிலிருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தே விபத்துக்குள்ளானது.

அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி அருகிலிருந்த ஆழமான பள்ளத்தாக்கிற்குள் தலைகீழாக பாய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த உடனேயே மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அந்தப் பகுதியில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவசர காவு வண்டி சேவைகள் இல்லாததால் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

அவசர காவு வண்டிவசதி இல்லாத காரணத்தால், காயமடைந்த பயணிகள் மற்றும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் பொதுமக்களின் வாகனங்கள் மூலமே மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

விபத்து நிகழ்ந்த சாலை மலைப்பாங்கான மற்றும் ஆபத்தான வளைவுகளைக் கொண்ட பகுதியாகும். இதனால் அப்பாதை நீண்ட காலமாகவே அபாயகரமான வழித்தடமாக அறியப்படுகிறது.

இந்த விபத்திற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், எத்தியோப்பியாவின் சிடாமா பிராந்தியத்தில் பேருந்து ஒன்று நதிக்குள் விழுந்து 66 பேர் உயிரிழந்த சம்பவமும் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


 

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்