யோஷித ராஜபக்ச கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்  மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றின் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானபோதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்சவை நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

எனினும், சட்டரீதியான காரணங்களால் தன்னால் குறிப்பிட்ட நாளில் முன்னிலையாக முடியாது என அவர் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து இன்று ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்