கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பூனாவ பொலிஸார் தெரிவித்ததன்படி, நுரைச்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அந்த நேரத்தில் பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி, நிறுத்தப்பட்டிருந்த பட்டா வாகனத்துடன் பலமாக மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலின் தாக்கம் காரணமாக லொறி கட்டுப்பாட்டை இழந்து பட்டா வாகனத்தின் மீது கவிழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்