Font size:
Print
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என நடிகர் ராகவா லோரன்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் தான் போட்டியிடுவது தர்மமே இல்லை எனக் கருதுவதால், இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனிப்பட்ட ஆசைக்காக அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், திருச்சி கிழக்குத் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related Posts
