அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரானின் இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா அண்மையில் மேற்கொண்ட தாக்குதல்கள், இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் பிரிவை மீறுவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால், நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை செயல்முறை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

போர், அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளும், ஈரான் அரசின் அதிகார மையங்கள் இணைந்து மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர் தொடர்பிலும் அமெரிக்கா, ஈரானை நடத்திய விதம் விளையாட்டு நியமங்களுக்கு முரணானதாக இருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


 

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்