லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து ; 8 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டெல்லி–மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில், 8 பேர் உயிரிழந்ததுடன், 24-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தின் தனவாடா பகுதி அருகே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரிஷிகேஷில் இருந்து இந்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோதலின் தாக்கத்தால் பேருந்தும் லாரியும் தீப்பற்றி எரிந்த நிலையில், பேருந்தில் பயணித்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த 27 பயணிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

மீதமுள்ள காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்