கூரை இடிந்து 14 சிறுவர்கள் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் இயங்கி வந்த தனியார் கல்வி நிலையம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில், 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில், பல மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், மீட்புக் குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மீட்புப் பணிகளை நிறைவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் ஐந்து சிறுவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப்பும் இந்தச் சம்பவத்தை நெஞ்சை உலுக்கும் துயரம் எனக் குறிப்பிட்டு, உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கல்வி நிலையத்தை முறையற்ற வகையில் நடத்தியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்