தினமும் காற்றில் வீணாகும் தங்கம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலகின் மிகத் தொலைவான பனிக்கண்டமான அண்டார்டிகாவில் அமைந்துள்ள மவுண்ட் எரேபஸ் எரிமலை, நாள்தோறும் தங்கத் துகள்களை வளிமண்டலத்தில் வெளியிடுவதாக வெளியாகியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வுகளின்படி, இந்த எரிமலை தினமும் சுமார் 10 பவுன் எடைக்கு சமமான நுண்தங்கத் துகள்களை காற்றில் வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

இந்த தங்கத் துகள்கள் காற்றின் மூலம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பரவி, அண்டார்டிகாவின் பனிப்பரப்பில் படிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 இதன் மதிப்பு ஆண்டுக்கு தோராயமாக 18.9 கோடி என சொல்லப்படுகிறது.

உலகின் செயலில் உள்ள சில எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படும் மவுண்ட் எரேபஸ், எரிமலை வாயுக்களுடன் மிகச் சிறிய அளவிலான தங்கத் துகள்களையும் வெளியிடுவதால், இது புவியியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கத்தின் அரிய தன்மை மற்றும் உலகளாவிய மதிப்பைக் கருத்தில் கொள்ளும் போது, இந்த தகவல் நகைப்பிரியர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்