முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசை கவிழ்க்க நட்சத்திர ஓட்டல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் சதி ஆலோசனை நடத்தியதாகவும், முதற்கட்டமாக த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 180 கோடி ரூபாயை விநியோகிக்க திட்டம் தீட்டப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக யூடியூபர் IPDS திருநாவுக்கரசு முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி நரேஷ், சென்னை தியாகராஜன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், கரூர் தி.மு.க. பிரமுகர்களும் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான ரமேஷ் மற்றும் கார்த்திக்கிற்கு இதில் தொடர்புள்ளது கண்டறியப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சென்னை இ.சி.ஆர். நட்சத்திர ஓட்டலில் திருச்சி நரேஷை தி.மு.க.பிரமுகர்கள் ரமேஷ், கார்த்திக் சந்தித்ததாகவும், அங்கு வைத்தே ஆட்சி கவிழ்ப்பிற்கு உதவும் எம்.எல்.ஏ.வுக்கு ரூபாய் 35 கோடி கொடுக்கலாம் என தி.மு.க. பிரமுகர்கள் உறுதியளித்ததாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
தி.மு.க. பிரமுகர்கள் கூறியதை தொடர்ந்து நரேஷ் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க மற்றும் நாடார் அமைப்பை சேர்ந்த சீனிவாசன், செல்வனுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தி.மு.க. பிரமுகர்கள் ரமேஷ் மற்றும் கார்த்திக் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்கள் என்றும் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த போது டாஸ்மாக்கில் ஆதிக்கம் செலுத்திய கரூர் கம்பெனியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது
இந்நிலையில், த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சம்மதம் தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்க முதற்கட்டமாக ரூ.180 கோடி திரட்டப்பட்டதாகவும், அப்பணத்தை கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் மூலம் எம்.எல்.ஏ.க்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணை நடத்தி வரும் போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனம் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Font size:
Print
Related Posts
