பாகிஸ்தானில் தாக்குதல்; 30 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பலுசிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தானின் துணை ராணுவப் படையினர் 30 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாவட்டத்தில் கடலோரக் காவல்படை முகாம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் துணை ராணுவப் படையினர் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் காவல்படை முகாமை முற்றிலுமாக அழித்துவிட்டோம், பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என பலுச் விடுதலை ராணுவம் தெரிவித்துள்ளது.

தற்கொலைத் தாக்குதல் தொடர்பான 43 வினாடி வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்