இரட்டை கொலை: சந்தேகநபர் இலங்கையில்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர், மாலைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் பதுங்கியிருந்த குறித்த சந்தேக நபர், நேற்று பிற்பகல் (04) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக சிறப்புப் பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த இரட்டைக் கொலையை நிகழ்த்தியவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கி, குற்றத்திற்கு நேரடியாக உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் இந்த நபர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கொலையின் மூல காரணத்தைக் கண்டறிவதற்கும், மேலதிக விசாரணைகளுக்கும் பொறுப்பான மேற்கு, தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம், நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபரை ஒப்படைக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

  இந்த வழக்கின் பின்னணியில் உள்ள மற்ற சந்தேகநபர்கள் மற்றும் சம்பவத்தின் முழுமையான சூழ்நிலைகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்