கொங்கோவில் எபோலா ; 473 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்று 1,502 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 473 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கொங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த எபோலா, தற்போது கொங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

குறிப்பாக, அந்நாட்டின் இடுரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு ஆகிய மாகாணங்களில்தான் இந்த வைரஸின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் கொங்கோ மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான விமான போக்குவரத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்